இமையா விழிகள்
வருடங்கள் பல நிமிடங்களாய் கடந்தாலென்ன,
இமைகளில் உன் நினைவு நித்தம் இமைக்க மறக்குதடி...
கண்கள் சந்தித்த ஒரு கணமே,
கருவிழியில் ராட்டிணமாய் சுழலுதடி...
கயல்விழியாள் பார்வை தனில்,
கணையாழியாய் மாட்டிக்கொண்டேன் மீள தான் வழியில்லை...
விழி செய்யும் கதிர்வீச்சிலிருந்து மீளவும் மனமில்லை...
கூர்விழியாள் கோபம் தனில்,
என்னிதயம் குத்தூசியாய் துளைக்குதடி...
சொற்கள் எனும் கூர்வாளால்,
கூறு போட்டாய் இதயம் தனை...
வலியும் சுகம் தானே...
நீ மடந்தையானால் என் வாழ் நாளும் நரகம் அன்றோ...
சிப்பி இதழ் திறவாய் என் சித்திரமே...

கருத்துகள்
கருத்துரையிடுக