குருவி



காதல் குருவி பறந்து சென்றடையும் இடம் தாம் காமமா?
காம கழுகு பயணத்தில் காதல் கூட்டை அடைய முடியுமோ?
பிறப்புகள் இரட்டையேயெனிலும், கொண்டிருப்பது ஒத்த உணர்வல்லவே...
காதலில் கூடலும் இயல்பே எனில்!
புணர்ந்து கூடலில் இன்பமும் உண்டோ காதலின் மனதிற்க்கு!?
குளிரில் இதமளிக்கும் நெருப்புக்கும்,
உணர்விழந்த உடலை எரிக்கும் நெருப்புக்கும் உள்ள பற்றே...




குறிப்பு: பெண்களையும் குழந்தைகளையும் புணரும் காமுகரை எண்ணுகையில் வாழும் நொடியினை நொந்து இறக்குமாரு தண்டிக்க வல்லவோ தோன்றுகிறது... தன்னிலை உணர காதல் செய் அது உன்னை செம்மை படுத்தும்... உலகில் ஜனிக்கும் புல்லுக்கும் உணர்வழித்திருக்கிறான் இறைவன்... உணர்வை உணர்வு கொள் மானிடா...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காப்பாளன் - முதல் பகுதி

நான் அவள் நிலா...